Saturday, December 20, 2008

எனக்கும் ஆசை தான் -நான்
இந்த பூமி வந்ததன்
ரகசியம் அறிந்திட ...

நான் யார் ?
எதற்காக பிறப்பெடுத்தேன் ?
என ஆயிரம் கேள்விகள் எனைத் துரத்த ,நீண்டு நிற்கும் வாழ்க்கைப் பாதையில் விடை தேடும் பயணத்திற்காய் நானும் ... ஒருநாள் முடிவுறாத ஒரு பாடலின் துயரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பயணப் பட்டிருப்பேன் இப் பூமியை விட்டு......

இங்கே என் அடிமனத்தில் பதிந்து போன நினைவுகளுக்கு வார்த்தைகளால் வர்ணம் குடுக்க முயற்சிக்கிறேன் ,ஆனால் தெறிப்பது என்னமோ சிவப்பு வர்ணம் தான்... அழியா தடங்களோடும் கண்ணீர் பிசுபிசுப்போடும் ...
சிலது மட்டுமே புத்தகத்துக்குள் பாதுகாத்த மயிலிறகு போல வருடிச் சென்றவை ...
எதுவாய் இருந்தாலும் நிர்வாணத்தின் நிஜத்தோடு இங்கே ...
என் இதய நாட் குறிப்பேட்டில் பதிந்து போன நினைவுகளுக்கு இந்த பக்கங்கள் ....
 
Copyright © 2007-2009 www.snehidhi.tk™. All Rights Reserved.